Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஜூன் 14 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வருடம் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் மே மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், வீதி விபத்துகள் 1,104 இடம்பெற்றுள்ளன. அதன் காரணமாக 1,161 பேர் உயிரிழந்துள்ளனர் என்று, வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.
அந்தச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், மரணமடைந்தவர்களில் 349 பேர் பாதசாரிகள் ஆவர். 98 பேர் சாரதிகள் ஆவர். 163 பேர் பயணிகள் ஆவர். சைக்கிள் ஓட்டிச்சென்றோர் 109 பேரும் அடங்குவர்.
மோட்டார் சைக்கிள் சாரதிகள் 441 பேரும் மரணமடைந்துள்ளனர். அவர்களில் 22 பேர், தலைக்கவசம் அணியாமை காரணமாக மரணமடைந்துள்ளனர். இருவர், தலைக்கவசம் கலன்று வீசியெறியப்பட்டமையால் மரணித்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய நபர்களும் இதில் உள்ளடங்குகின்றனர் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில், இடம்பெற்ற ஆகக்கூடுதலான வீதி விபத்துகள் மேல் மாகாணத்திலேயே இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொருநாளும் வீதிக்கு இணைந்துகொள்ளும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தல் மற்றும் ஆகக்கூடுதலான வேகம் ஆகியனவே, வீதி விபத்துகளுக்கு பிரதான காரணங்களாக அமைந்திருந்தன என்றும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
14 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago