2021 மே 18, செவ்வாய்க்கிழமை

அளவ்வை ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்வு

Super User   / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குருநாகல் அளவ்வயில் நேற்று மாலை இடம்பெற்ற 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

நேற்று சனிக்கிழமை கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற கடுகதி ரயில் அதே பாதையில் ரம்புக்கன நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்கு ரயிலொன்றின் பின்புறத்தில் மோதியது. அதன்பின் கொழும்பிலிருந்து பொல்காவவெல நோக்கிச் சென்ற கடுகதி  ரயிலும் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர், ரயில் சாரதி, ரயில் சாரதி உதவியாளர், மற்றொரு ரயில்வே ஊழியர் உட்பட ஐவர் பலியாகியாகியுள்ளனர். இவ்விபத்தில் காயமடைந்த மேலும் 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .