2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

பெற்றோரின் கவனயீனத்தால் பிறந்து 5 நாட்களேயான சிசு பலி

Menaka Mookandi   / 2010 ஜூலை 14 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்றோரின் கவனயீனம் மற்றும் அறியாமை காரணமாக பிறந்து ஐந்து நாட்களேயான சிசுவொன்று  உயிரிழந்த சம்பவம் கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் நேற்று இடம்பெற்றுள்ளது.அக்குறணை, மல்வானஹின்னை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவர் தனது நான்காவது குழந்தையை வீட்டிலேயே பிரசவித்துள்ளார்.

பிறக்கும் போதே வளர்ச்சி குன்றிருந்த அந்த சிசுவினை வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளிக்காது வீட்டிலேயே வைத்து அவர்கள் பராமரித்துள்ளனர். இந்நிலையில், பிறந்து ஐந்து நாட்கள் மட்டும் உயிர்வாழ்ந்த அந்த சிசு, நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

சிசுவின் மரணம் குறித்த விசாரணையை நடத்திய அக்குறணை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.சி.எம். றமீம், பெற்றோரின் கவனயீனம் மற்றும் அறியாமை காரணமாகவே இந்த சிசு உயிரிழந்ததாக கூறினார்.

அத்துடன் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பெற்றோர்கள் விழிப்பாக செயற்பட வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகாஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--