Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 ஜனவரி 09 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு இன்று இனிதே நிறைவடைந்தது. கடந்த 6ஆம் திகதி தொடர்க்கம் இன்று 9ஆம் திகதிவரை கொழும்பில் நடைபெற்ற 'சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு' இறுதிநாள் சிறப்பு நிகழ்வுகளுடன் இனிதே நிறைவுபெற்றன.
உலகில் முதன்முதலாக தமிழ் எழுத்தாளர்களுக்கான சர்வதேச மாநாடு கொழும்பில் நடத்தப்பட்டன. இதில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், லண்டன், ஜேர்மன் போன்ற பல நாடுகளிலிருந்தும் ஏராளமான தமிழ் எழுத்தாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இன்றைய இறுதிநாள் நிகழ்வில் முக்கிய 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவையாவன.
1. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இம்மாநாடு நடத்தப்படல் வேண்டும்.
2. சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைமை செயலகம் இலங்கையில் அமைந்திருத்தல்.
3. தமிழ் பேசும் மக்கள் வாழும் எல்லா நாடுகளிலும் கிளை அலுவலகங்கள் அமைக்கப்படல் வேண்டும்.
4. இம்மாநாட்டை தொடர்ந்து நடத்திச் செல்வதற்கென நிதியம் ஒன்றை உருவாக்கல்.
5. சர்வதேச தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்களை பதித்து வெளியிடுவதற்கான பதிப்பகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
மேற்குறிப்பிடப்பட்ட பிரதான 5 தீர்மானங்களுடன் மேலும் பல எதிர்கால திட்டங்களும் முன்வைக்கப்பட்டன. தமிழ் எழுத்தாளர்களின் நலன்களில் கவனம் செலுத்துதல், தமிழ் இலக்கிய முயற்சிகளை சர்வதேசமெங்கும் எடுத்துச் செல்லல், தமிழ் மொழியின் செழுமையை பிற மொழிகளுக்கு எடுத்துச் செல்லல் போன்ற எதிர்கால திட்டங்களும் இம்மாநாட்டில் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
46 minute ago
52 minute ago