Super User / 2011 பெப்ரவரி 16 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(நபீலா ஹுஸைன்)
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தாலும் மண்சரிவினாலும் பாதிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு தலா 50,000 ரூபா நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென சுகாதார சேவைகள் தொழிற்சங்க சங்கங்களின் கூட்டமைப்பு இன்று வலியுறுத்தியுள்ளது.
18 மாவட்டங்களில் 26,000 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படுவது அவசியம் எனவும் மேற்படி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனியார் துறை ஊழியர்களுக்கு 50,000 ரூபா நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால், அரசாங்க ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 3 மடங்கு மாத்திரம் கடனாக வழங்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி கூட்டமைப்பு மேலும் கூறியுள்ளது.
எனினும் 3 மாத அடிப்படை சம்பளத் தொகையை கடனாக வழங்குவதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என அக்கூட்டமைப்பின் தலைவர் சமன் ரட்னபிரிய தெரிவித்தார்.
6 minute ago
18 minute ago
23 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
23 minute ago
28 minute ago