2021 மார்ச் 01, திங்கட்கிழமை

ஆஸி செல்ல முற்பட்டதாக இந்திய அகதி முகாம்களைச் சேர்ந்த 55 இலங்கையர் கைது

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அகதி முகாம்களின் தங்கியுள்ள நிலையில் படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா பயணிக்கவிருந்த இலங்கையர்கள் 55பேரை இந்திய கியூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளர்.

திருச்சி, ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் உச்சிப்புளி ஆகிய முகாம்களைச் சேர்ந்த 55பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தூத்துக்குடி கடல் மார்கமாக அவுஸ்திரேலியா பயணிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்காக இவர்கள் அனைவரும் முகவர் ஒருவருக்கு பணம் வழங்கியுள்ளதாகவும் அம்முகவரின் ஆலோசனைக்கிணங்க நேற்று இரவு சிந்தளகரை வெட்காளியம்மன் கோவில் அருகே தங்கியிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்தவர்களை விசாரணைக்கு பின்னர் மீண்டும் சொந்த முகாம்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை இந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (நக்கீரன்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .