Editorial / 2019 நவம்பர் 07 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்றாவது பங்காளிக் கட்சியான ரெலோவும் தீர்மானித்துள்ளது.
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழ் அரசுக் கட்சி, புளொட் ஆகியன ஏற்கெனவே சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்திருந்த நிலையில், ரெலோவின் முடிவு குறித்து ஆராய அதன் தலைமைக்குழுக் கூட்டம் நேற்று (06) வவுனியாவில் இடம்பெற்றது.
மிகவும் இரகசியமான முறையில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டம் சுமார் 6 மணித்தியாலங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரெலோவின் துணைத தலைவர் இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் சிறீகாந்தா உள்ளிட்ட தலைமைக்குழுவின் 15 உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது தொடர்பாக, ஆராயப்பட்ட போது, வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன், தலைமைக்குழு உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், பெரும்பாலான உறுப்பினர்கள், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக நேற்று (06) இரவு கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago