2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மீன்பிடி: 6 மாதங்களில் 236 பேர் கைது

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 24 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஏ.ஜயசேகர)

சட்டத்திற்குப் புறம்பான வகையில் மீன்பிடியில் ஈடுபட்டதாக கடந்த 6 மாதங்களில் 236 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மீன்பெருக்கம், மீன் அடர்த்தி கடல் முருகைக் கற்பாறை என்பவற்றுக்கு கேடு விளைவிக்கும் மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தியவர்களாவர்.

1996ஆம் ஆண்டு மீன்பிடி நீர்வள சட்ட ஏற்பாடுகளை அச்சொட்டாக பயன்படுத்தும்படி அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அறிவித்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்திற்குப் புறம்பான முறையில் மீன்பிடிப்பது மிக மோசமாக அதிகரித்து வருவதையடுத்தே பொதுமக்கள் அமைச்சரிடம் முறையிட்டுள்ளனர்.

சில தீயசக்திகள் மீன்கள், மீன் முட்டைகள், மீன்குஞ்சுகள் ஆகியவற்றையும் வாரி எடுக்கக்கூடிய சிறிய கண் வலைகளை பயன்படுத்தவும் முருகைக் கற்பாறைகளை அழிக்கக்கூடிய வள்ளங்களையும், டைனமைட் வெடியையும், நஞ்சையும் கூட மீன்பிடியில் பயன்படுத்தத் தூண்டி வருகின்றனர். இது மீன்பிடித் தொழிலுக்கும் நுகர்வோருக்கும் மீளமுடியாத  கெடுதியை விளைவிப்பதாகும் என அமைச்சரின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

சட்டத்திற்குப் புறம்பான மீன்பிடியில் ஈடுபடுவோர் மீதும் அவரது அதிகாரம், அரசியல் செல்வாக்கு என்பன பற்றிக் கவனியாது சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் சேனாரத்ன அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.


இலங்கையின் கரையோரம் முழுவதுமே சட்டத்திற்கு மாறான முறையில் மீன்பிடித்தலுக்கு எதிரான நடவடிக்கை தொடரும். இதுவரை புத்தளம், கல்முனை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு, திருகோணமலை, தங்காலை, களுத்துறை, மாத்தறை, மன்னார், சிலாபம், காலி ஆகிய இடங்களிலிருந்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீன்பிடித் தொழிலின் அபிவிருத்திக்கு கேடாக சட்டத்திற்குப் புறம்பான மீன்பிடி அமைவதால் சட்டத்தையும் மிக இறுக்கமாகப் பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் தனது அதிகாரிகளுக்கு கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--