2026 ஜனவரி 07, புதன்கிழமை

குப்பை வரிக்கு எதிராக வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2026 ஜனவரி 06 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ நகரத்தில் உள்ள வர்த்தகர்கள் கடைகளை மூடி நோர்வூட் பிரதேச சபைக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நோர்வூட் பிரதேச சபை மாதத்திற்கு ரூ.200 குப்பை வரியை 2025 ஆம் ஆண்டு முதல் வசூலிக்க முடிவு செய்துள்ளது, ஆண்டுக்கு ரூ.2400 ரூபாய் செலுத்தவேண்டும்.

எனினும், ஆண்டுக்கான முழுத்தொகையையும் ஒரே தடவையில் செலுத்தும்  கடைகளில் மட்டுமே பிரதேச சபை குப்பைகளை சேகரிக்கும் என்றும் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

நோர்வூட் பிரதேச சபை வருமானம் ஈட்டும் பொருளாதார ரீதியாக வலுவான பிரதேச சபை என்றும், அத்தகைய பிரதேச சபை குப்பை வரி வசூலிப்பது நியாயமற்றது என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட   வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

நோர்வூட் பிரதேச சபை, நகரில் பல பொதுப்பணிகளை மேற்கொண்டுள்ளது, ஆனால் அது போதுமானதாக இல்லை என்றும், நோர்வூட் பிரதேச சபையால் அவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் கூட சுத்திகரிக்கப்படவில்லை என்றும், இது பல சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .