Super User / 2011 ஒக்டோபர் 04 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(காஞ்சன குமார ஆரியதாஸ)
6 கோடி ரூபா பெறுமதியான புராதன புத்தர் சிலையொன்றை விற்பனை செய்ய முயன்ற இருவரை தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அச்சிலையையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் கான்ஸ்டபிள் ஆவார்.
உலோகத்தாலான 48 கிலோகிராம் எடையுள்ள இந்த சிலையை வாங்குவதற்கு விரும்பும் ஒரு தரப்பாக தம்மைக் காட்டிக்கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளது.
இந்த பேரத்தை முடிப்பதற்காக தம்புள்ளையிலுள்ள உல்லாச ஹோட்டலொன்றுக்கு அருகில் வருமாறு சந்தேக நபர்கள் அழைக்கப்பட்டபின்னர் அவர்கள் கைது செய்யப்பட்னடர்.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.கே. ஞானசிறியின் நெறிப்படுத்தலின்கீழ் தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
சந்தேக நபர்களுக்கு இந்த சிலை எப்படி கிடைத்தது என்பது இதுவரை அறியப்படவில்லை. தடுப்புக் காவல் உத்தரவின்கீழ் சந்தேக நபர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025