Super User / 2010 ஜூலை 15 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
பொது இடத்தில் குப்பை எறிந்த குற்றச்சாட்டில் 6 பேரை தெஹிவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நபர்கள் வாகனங்களில் வந்து, பொது இடங்களில் குப்பைகளை எறிந்ததாக பொலிஸாரர் தெரிவித்துள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சூழலை மாசுபடுத்தும் விதத்திலான இத்தகைய நடத்தையில் ஈடுபடுபவர்களைக் கையாள்வதற்காக பொலிஸ் திணைக்களம் விசேட பறக்கும் படையொன்றை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி இது தொடர்பாக கூறுகையில், இத்தகைய நபர்களைக் கைது செய்வதற்கு மாநகர சபைகள், நகரசபைகள் மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றுக்கு பொலிஸார் உதவுவதாகத் தெரிவித்தார்.
"பொது இடங்களில் குப்பை வீசியமைக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட முதல் நபர்கள் இவர்களா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், இவ்வாறு குப்பை வீசி எறிந்தவர்கள் பலரை இதற்கு முன்னரும் நாம் கைது செய்துள்ளோம்" என அவர் கூறினார்.
17 minute ago
2 hours ago
Senthilan, C. Friday, 16 July 2010 01:09 AM
நல்ல விடயம். முதலில் கொழும்பு புறக்கோட்டை ஐந்தாம் குறுக்கு தெரு போன்ற முக்கிய இடங்களிலும் புளுமண்டல் வீதியில் உள்ள குப்பை மேட்டையும் அகற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago