2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

6 வருடங்களுக்கு மேல் தடுப்புக் காவலில் உள்ளவர்களுக்கு பிணை வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

Super User   / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

6 வருடங்களுக்கு மேல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்களை சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்குமாறு, அனைத்து நீதவான் நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

பிரதம நீதியரசர் அசோக டி சில்வா மற்றும் என்.ஜி. அமரதுங்க, சந்திரா ஏக்கநாயக்க ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

அரசியலமைப்பின் 126 ஆவது சரத்தின்கீழ், இந்த உத்தரவைப் பிறப்பிப்பதற்கான அதிகாரம் தனக்கிருப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அடிப்படை உரிமை மீறல்கள் குறித்த மூன்று மனுக்கள் உயர் விசாரணைக்கு வந்தபோதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

தடுப்புக் காவலிலுள்ள அனைத்து கைதிகளினதும் விபரங்களை பட்டியல்படுத்துமாறும் சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X