Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூன் 05 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
நில்வள, ஜின் மற்றும் களு ஆகிய கங்கைகளிலும், நீர்வழியும் இடங்களிலும் முன்னெடுக்கப்படுவதற்காக, 1968ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட யோசனையை நடைமுறைப்படுத்தியிருந்தால், பாரிய வௌ்ள அனர்த்தம் ஏற்பட்டிருக்காது என்று பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜீர அபேவர்த்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், நேற்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“பூமியில் விழும் ஒவ்வொரு நீர்த்துளியையும் வீண்போகாமல் விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று மகா பராக்கிரமபாகு மன்னன் கூறியிருந்தார். அவரது கூற்றை கடைப்பிடித்திருந்தால் இப்படியான அழிவுகள் ஏற்பட்டிருக்காது.
எமது நாட்டில் கங்கைகளை சரியான முறையில் முகாமைத்துவம் செய்யவில்லை.
சரியான முகாமைத்துவம் இன்மையானால் தான், இயற்கை அனர்த்தத்தால் மக்கள் அனைவரும் வேதனைப்பட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கையர் என்ற ரீதியில் நாம் அனைவரும் வருத்தப்பட வேண்டும்.
1960ஆம் ஆண்டு அமெரிக்கா, கொலறாடோவில் உள்ள ஈ.சீ.ஐ பொறியியல் நிபுணர்கள் நிறுவனத்தில் இலங்கை தொடர்பில் ஆய்வறிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு புத்தகம் ஒன்று கையளிக்கப்பட்டது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “நாட்டில் காணப்படும் நதிகளை உரிய நேரத்தில் ஒழுங்குப்படுத்தாவிட்டால் இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறும்” என முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001இல் ஜின் கங்கையை பயன்படுத்தி மின்சார உற்பத்தி, நீர்ப்பாசன முறையை பயன்படுத்தல் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை சீனாவுடன் இணைந்து முன்னெடுக்க முற்பட்டபோது, வாருக்கந்தேனிய பிரதேச மக்கள் காணிகளை அபகரிப்பதாக எதிர்த்தனர். அந்த வேலை திட்டத்தினை அப்போது செய்யக்கிடைத்து இருந்தால், இத்தகைய பாரிய அழிவைச் சந்தித்து இருக்கமாட்டோம்.
எதிர்காலத்தில் நாம் இவைகளை முறையாக கட்டுப்படுத்தாவிட்டால், சகலரும் தங்களது பிரதேசங்களை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
உண்மையில் இந்த வௌ்ளம், மண்சரிவு ஆகியவற்றுக்கு முழுப்பொறுப்பும் இயற்கை மட்டும் அல்ல. இயற்கையால் வழங்கப்பட்ட கொடையை மனிதர்களாகிய நாம் சரியான முறையில் கட்டுப்படுத்த முடியாமல் போனதே இதற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
1968ஆம் ஆய்வறிக்கையில்,. ஜின் கங்கையில் ஜஸ்மின் அணை நிர்மாணிக்கப்பட வேண்டுமெனவும் மிகத் தெளிவாக வௌ்ளப் பாதுகாப்பு திட்டமொன்றுக்காக, களுகங்கை வௌ்ளப் பெருக்கு திட்டமொன்றாக மகுர அணை, குருள் அணை மற்றும் இரத்தினபுரி அணை ஆகிய மூன்று அணைகளும் 60 வருடங்களுக்கு முன்பாக முன்மொழியப்பட்டுள்ளன.
அடுத்ததாக இதில் சொல்லப்படும் அணை கட்டப்படும்போது, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களுக்கு மின் நிலையங்களும் நிர்மாணிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
7 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
7 hours ago
19 Sep 2025