2025 நவம்பர் 05, புதன்கிழமை

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கைது

R.Tharaniya   / 2025 நவம்பர் 05 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிங்குராங்கொடை பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (4) அன்று இரவு, தனது சகோதரனை விடுவிக்க கூறி ஹிங்குராங்கொடை பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்துவதாகவும், குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

ஹிங்குராங்கொடை பொலிஸ் துறையினரின் கூற்றுப்படி, இலங்கை மின்சார சபையின் (CEB) இரண்டு ஊழியர்கள் அளித்த தனித்தனி புகாரைத் தொடர்ந்து, யடியல்பத்தன பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மின் கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்க சந்தேக நபரின் சகோதரரின் வீட்டிற்கு தொழிலாளர்கள் சென்றதாக கூறப்படுகிறது, அப்போது உள்ளூர் பிரதிநிதி அவர்களை அச்சுறுத்தி தடுத்ததாகவும், அவர்களின் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் சந்தேக நபர் தனது சகோதரர் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹிங்குராங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு வந்து, அதிகாரிகளை அச்சுறுத்தி, அவரை விடுவிக்கக் கோரி பலத்தை பயன்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் புதன்கிழமை(5) அன்று ஹிங்குராங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X