2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் 7 வயதுச் சிறுவன் பலி: சந்தேக நபர்கள் 9 பேர் கைது

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 16 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்னா பரனமன்ன)

7 வயதுச் சிறுவன் துப்பாக்கிச் சூட்டில் பலியான சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருவளையிலுள்ள பூட்  சிற்றிக்கு அருகில் ஆயுதமேந்திய கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டில் 7 வயது சிறுவனொருவன் பலியாகினான்.

கைது செய்யப்பட்ட இந்த 9 சந்தேக நபர்களில் 4 பொலிஸாரும் 5 சிவிலியன்களும் அடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

முச்சக்கர வண்டியில் தனது தந்தையுடன் இருந்த நிலையில் அச்சிறுவன் தற்செயலாக சுடப்பட்டுள்ளதாகவும் அச்சிறுவனின் தந்தையும் இச்சம்பவத்தில் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.(DM)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .