2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 8 பொலிஸார் கைது

Super User   / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வாகரை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் 7 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் சிவிலியன்கள் இருவரும் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

திம்புலாகலவிலள்ள சிறிபுர எனும் இடத்திலுள்ள தேவாலயமொன்றில் இவர்கள் புதையல் தோண்டியதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இது தொடர்பாக கிராமவாசிகளிடமிருந்து கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து பொலன்னறுவை மன்னம்பிட்டி பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--