2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

7 பேர் காணாமல் போன வழக்கு ஒத்திவைப்பு

Kanagaraj   / 2013 ஜூலை 31 , பி.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-லக்மால் சூரியகொட

2008 ஆம் ஆண்டு காணாமல் போன ஏழுபேர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை, பத்தரமுல்லை மற்றும் வத்தளையைச்சேர்ந்த குடும்ப அங்கத்தவர்களான ஜோ றீட் அந்தனி, ராஜீவ் நாகநாதன், பிரதீப், நீல கேஷன், சஜித, திலான் மற்றும் ஜோ றீட்டின் தந்தை ஆகியோர் காணாமல் போனமை தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் திலின கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காணாமல் போன ஏழுபேரின் சார்பிலும் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி, இவர்கள் காணாமல் போய் ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில்  அவர்கள் தொடர்பிலான எந்தவிதமான தரவுகளையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் கண்டுப்பிடிக்கவில்லை என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இந்த ஏழுபேரும் தெஹிவளை, பத்தரமுல்லை மற்றும் வத்தளை ஆகிய இடங்களில் வைத்தே இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டதாக சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

சட்டத்தரணியின் வாதத்தை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதவான் திலின கமகே இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கையை  ஒக்டோபர் மாமம் 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதுடன் வழக்கையும் அன்றைய தினத்திற்கே ஒத்திவைத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--