2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

கொழும்பிலுள்ள 7 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 16 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாசடைந்த நீரைப் பயன்படுத்தி உணவு  தயாரித்ததன் காரணமாக  கொழும்பிலுள்ள 7 உணவகங்கள் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதாக சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

புறக்கோட்டை, தெமட்டகொடை, வாழைத்தோட்டம், மற்றும் ஆமர்வீதியில் அமைந்துள்ள உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

அண்மையில் கொழும்பு மாநகரசபையின் பொது சுகாதார அதிகாரிகள்,  சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு பொலிஸார்  ஆகியோர் இணைந்து கொழும்பபிலுள்ள பல உணவகங்களில் திடீர்  சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இந்த சோதனை நடவடிக்கையின்போது, அவர்கள் உணவகங்களில் பயன்படுத்தப்படும்  மாதிரி நீரைச் சேகரித்திருந்தனர்.

இந்த நீரை சோதனைக்கு உட்படுத்தியபோது, உணவு தயாரிப்புக்கு மாசடைந்த நீர் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. (DM)
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--