Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 14 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாவலப்பிட்டி வைத்தியசாலையின் கழிவுக் குழாய்தொகுதியிலிருந்து பிறந்து 7 மாதங்களேயான நிலையில் குழந்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை பணியாளர்கள் அடைப்புக்குள்ளான கழிவுக் குழாய் தொகுதியை சுத்தப்படுத்தும்போதே, குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி வைத்தியசாலையில் இதுபோன்ற சம்பவர்ங்கள் இதற்கு முன்னரும் இடம்பெற்றமை தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பதில் நீதிவான் நயனானந்த அலித்கமகே, சந்தேக நபர்களை கைதுசெய்யுமாறும் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
இது தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதய விக்கிரமசேகர மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார். (Suranga Rajanayake)
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago