2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

70 மாணவர்கள் வைத்தியசாலையில்

Editorial   / 2020 மார்ச் 05 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வாமைக் காரணமாக வாரியபொல ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த 70 மாணவர்கள் வாரியபொல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான தலைவலி, குமட்டல் காரணமாகவே குறித்த மாணவர்கள் வைத்தியசாலையில் இன்று (5) அனுமதிக்கப்பட்டதுடன், இவர்களுள் ஒரு மாணவர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலை வளாகத்தில் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டதால் வெளிவந்த புகைக் காரணமாகவே மாணவர்கள் திடீர் நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .