2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

வேலணை வேணியனின் 72 ஆவது பிறந்த தினம்

Super User   / 2010 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

ஜனநாயக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உபதலைவரான கங்கை வேணியின் (வேலணை வேணியன்) இன்று சனிக்கிழமை தனது 72 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார்.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான வேலணை வேணியன், சிறந்த கவிஞருமாவார். 1986 ஆம் ஆண்டில் 'கங்கை பொங்குது' எனும் தலைப்பில் அவர் நூலொன்றை வெளியிட்டார். இந்நூல் இலங்கை, இந்தியா, டென்மார்க் ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவர் எண் சோதிடத்துறையிலும் பெயர் பெற்றவராவார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ தொடர்பான துல்லியமான எதிர்வுகூறலுக்காக  21.01.1989 ஆம் திகதி  தனது சுச்சரித்த இல்லத்தில் வேலணை வேணியனைப் பாராட்டி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

அரசியல்வாதியாக அல்லாமல் சமாதான செயற்பாட்டாளராகவும் சமூக சேவையாளரகாவும் தன்னை இனங்காட்ட விரும்புவதாக வேலணை வேணியன் கூறுகிறார். 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--