2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

ஜீனா மெடத்துடன் கைதான 8 பெண்கள் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை

Super User   / 2011 நவம்பர் 28 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லக்மால் சூரியகொட)

கொள்ளுபிட்டி லிபர்ட்டி பிளாஸா கட்டிடத்தில் இரவு விடுதியென்ற பெயரில் விபசார விடுதியொன்றை நடத்தி உதவியதாக குற்றச்சாட்டில் ஜீனா மெடம் என்பவருடன் கைது செய்யப்பட்ட 8 பெண்களை கொழும்பு கோட்டை நீதவான் இன்று மேற்படி குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்தார்.

இவ்வழக்கு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இப்பெண்கள் விபசார விடுதியில் இருந்தார்கள் என்பதற்காக அவர்கள் விபசார விடுதி நிர்வாகத்திற்கு உதவினார்கள் என குற்றம் சுமத்தப்பட முடியாது எனக் கூறினார்.

விபசார விடுதியில் இருந்தமைக்காக பெண்கள் மீது குற்றம்சுமத்துவதற்கு சட்டத்தில் இடமில்லை என அவர் கூறினார்.
இதையடுத்து மேற்படி குற்றச்சாட்டிலிருந்து எட்டு பெண்களை விபசார விடுதி நிர்வாகத்திற்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டிலிருந்து நீதவான் லங்கா ஜயரட்ன விடுவித்தார்.

ஜீனா மெடம் எனக் கூறப்படும் ரோஸ்மேரி பெலிசியா பெரேரா என்பவர் மீது, பெண்களை விபசாரத்திற்கு ஈடுபடுத்தியதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0

  • FATHIMA Tuesday, 29 November 2011 03:05 PM

    பெண்களே பெண்களுக்கு குழி வெட்டுறாங்க ........ என்ன பொழப்பு !!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .