Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.பாருக் தாஜுதீன்)
பாதசாரிக் கடவை அல்லாத இடங்களில் வீதியை கடந்த எண்பதுக்கும் மேற்பட்ட பாதசாரிகளுக்கு இன்று புதன்கிழமை கொழும்பு வாகன போக்குவரத்து நீதிபதி தலா 100ரூபா அபராதம் விதித்தார்.
தவறான இடத்தில் வீதியை கடந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட பாதசாரிகளை நகர வாகனப் போக்கு வரத்து பொலிஸ் மற்றும் முகத்துவார பொலிஸார், கொழும்பு வாகன போக்குவரத்து நீதிபதி ஜெயராம் ட்றெஸ்கி முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
இவர்கள் உரிய இடத்தில் வீதியை கடக்காமல் கண்ட இடங்களிலும் வீதியை கடந்து தமது உயிருக்கு ஆபத்தையும் வீதியில் வாகன நெருக்கடியையும் தோற்றுவித்ததாக பொலிஸார் இதன்போது முறையிட்டனர்.
இவ்வாறான குற்றமிழைத்தோரை நீதிமன்றுக்கு கொண்டு வருவதனால் நீதிமன்றில் நெருக்கடி ஏற்பட்டு முக்கிய வழக்குகளின் விசாரணைகள் தாமதப்படுவதாக நீதிவான் கூறினார். அவர் வீதி சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு வகுப்புகளை மீண்டும் ஆரம்பிக்கும்படி பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கினார்.
1 hours ago
4 hours ago
18 Oct 2025
uooran Wednesday, 19 October 2011 10:08 PM
இப்படியான வேலைககளை கல்முன மாநகர பகுதிகளிலும் சம்மாந்துறை பகுதிகளிலும் கட்டாயம் செய்யுங்க.
Reply : 0 0
meenavan Wednesday, 19 October 2011 10:33 PM
நம்மவர் வாழும் பகுதிகளில் இதை கட்டாயம் அமுல் நடத்தவேண்டும். தண்டபணம் செலுத்துகை, உடனடியாக வங்கியிலோ, தபாலகத்திலோ செலுத்தக்கூடியதாக அமைய வேண்டும்.
Reply : 0 0
pasha Thursday, 20 October 2011 02:36 PM
uooran, ஆம் மாடுகளை வீதிகளில் மேய விடும் உரிமையாளர்களையும் தண்டிக்க வேண்டும்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
18 Oct 2025