2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

8000 ரூபா உயர்வு கோரி தொழிற்சங்க நடவடிக்கை

Super User   / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                (நபீலா ஹுசைன்)

எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் 8000 ரூபா சம்பள உயர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் முகமாக கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜே.வி.பி. சார்ந்த தேசிய தொழிற்சங்க மையம் இன்று தெரிவித்தது.

ஐ.தே.கயை சார்ந்த, ஜாதிக சேவா சங்கமயவால் எடுக்கப்படும் எந்தவொரு முயற்சிக்கும் தமது ஆதரவு உண்டு என்றும் வியாழக்கிழமை நடைபெறும் சம்பள உயர்வு போராட்டம் பற்றிய கூட்டத்தில் தாம் பங்குபற்றவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

தேசிய தொழிற்சங்க மையம், 8000 ரூபா சம்பள உயர்வுக்காக தமது போராட்டத்தில் இணையுமாறு ஏனைய தொழிற்சங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

 நாம் வியாழக்கிழமை பொது முன்னணி என்ற மாநாடொன்றை நடத்தவுள்ளோம் என மேற்படி சங்கத்தின் தலைவர் சமந்த கேரலியாராச்சி தெரிவித்தார். வேறு வழியில்லாத நிலையில் நாம் வேலை நிறுத்தமொன்றை ஒழுங்கு செய்வோம் எனவும் அவர் கூறினார்.

இறுதி நடவடிக்கையான வேலை நிறுத்தத்துக்கு முன் ஆர்பாட்டம், வெளிநடப்பு என பல தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டோம் என அவர் கூறினார்.

8000 ரூபா சம்பள உயர்வுப் போராட்டத்துக்காக ஏனைய தொழிற்சங்கங்களுடன் பொது முன்னணி ஒன்றை அமைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை தேசிய தொழிற்சங்கமையம் நடத்தி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--