Suganthini Ratnam / 2012 நவம்பர் 11 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
ஹொரண, மொரஹஹேன பகுதியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து பொலிஸார் மூவர் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளனர்.
யாலஹேலேவத்தை என்னும் இடத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான முறைப்பாட்டை விசாரணை செய்வதற்காக சென்ற பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலேயே நேற்று சனிக்கிழமை இரவு இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
மதுபோதையில் சென்ற பொலிஸார் விசாரணை நடத்துவதற்கு முற்பட்ட வேளையிலேயே இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த பொலிஸார் உட்பட பொதுமக்கள் வைத்தியசhலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை மதுபோதையில் சென்றதாகக் கூறப்படும் பொலிஸார் மூவரும் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
26 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
26 Dec 2025