Menaka Mookandi / 2011 ஜூன் 08 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமாக பிறிதொரு நாட்டிற்கு செல்ல முயன்றதாகத் தெரிவிக்கப்படும் 9 இலங்கையர்கள் கொச்சியிலுள்ள விடுதியொன்றில் வைத்து நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட போதிலும் அவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட மறுத்து வருகின்றனரென பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பயணத்திற்கான அனுமதிப்பத்திரங்களின்றி தங்கியிருந்த 39 இலங்கையர்கள் கேரளாவிலுள்ள கொல்லம் பகுதியில் கடந்த மே மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் உள்ளூர் போக்குவரத்து முகவர் ஒருவரின் உதவியுடன் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
48 minute ago
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
4 hours ago
5 hours ago