2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

குவைத்திலிருந்து 9000 இலங்கையர்கள் நாடு திரும்புவர்

Super User   / 2011 மார்ச் 05 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்னா பரணமான்ன)

குவைத் அரசாங்கம் வழங்கியுள்ள பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி 9000 இலங்கையர்கள் நாடுதிரும்புவர் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

விஸா காலாவதியான, கடவுச்சீட்டுகளை தொலைத்த வெளிநாட்டவர்கள் தாயகம் திரும்புவதற்கு ஜுன் மாதம் வரையான பொதுமன்னிப்பு காலத்தை குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை சுமார் 1000 இலங்கையர்கள் குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை அணுகியுள்ளதாகவும் அவர்கள் குவைத்திலிருந்து வெளியேறுவதற்கான ஆவணங்கள் தயார்படுத்தப்படுவதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி விக்கிரமரத்தின தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--