2021 ஜனவரி 23, சனிக்கிழமை

PMD வாகன தரிப்பிடத்தில் தீ விபத்து; 47 மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை

Editorial   / 2019 நவம்பர் 11 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகன தரிப்பிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 மோட்டார் சைக்கிள்களும், ஓட்டோ ஒன்றும் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு 1, முதலிகே மாவத்தையில் அமைந்துள்ள குறித்த வாகன தரிப்பிடத்தில் நேற்று (10) இரவு 10 மணி அளவில் இந்த  தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை அணைப்பதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தீ பரவலுக்கான காரணம் தெரியவராத நிலையில், கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .