2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

"வெளியே வாருங்கள் சேர்ந்து போவோம்"

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 15 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், அரசாங்கத்திலிருந்து வெளியேறி அரசாங்கத்தை விமர்சனம் செய்தால் அந்த தேரருடன் இணைந்து பயணிப்பதற்கு என்னுடைய கட்சி தயாராக இருப்பதாக ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

2017ஆம் ஆண்டு நான் நாட்டிலிருந்து வெளியேற போவதாக சிலர் கூறுகின்றனர். நான், நாட்டைவிட்டு வெளியேற மாட்டேன். என்றோ ஒருநாள் நான் மரணித்தால் இந்த நாட்டிலேயே மரணிப்பேன். நான் இன்னும் 10 வருடங்களுக்கு அரசியல் செய்வேன். ஆகையால் நான், நாட்டைவிட்டுவெளியேறமாட்டேன்.

நாட்டு மக்களின் நலனுக்காக எனது கடைசி வியர்வைதுளி, இரத்த துளி இருக்கும் வரை அர்ப்பணிப்புடன் கடமையாற்றுவேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கின்றேன்.

அத்துரலிய ரத்ன தேரரினால் 19ஆவது அரசியல்திருத்த நகல் வெளியிட்டு வைக்கும் வைபவத்தில் எங்களுடைய பிரதிநிதியொருவரும் பங்கேற்றார். எங்களுடைய கொள்கைக்கும் ரத்ன தேரரின் யோசனைகளுக்கும் இடையில் நிறையவே ஒற்றுமை இருக்கின்றன. ரத்ன தேரர், அரசாங்கத்திலிருந்து வெளியேறி, அரசாங்கத்தை விமர்சித்தால் அவருடைய பயணத்தில் இணைந்துகொண்டு எம்மால் பயணிக்க முடியும் என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .