2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

"அம்பாறை உதவி ஆசிரியர் நியமனத்தில் தமிழர், முஸ்லிம்கள் புறக்கணிப்பு"

Super User   / 2010 ஜூலை 15 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் அம்பாறை மாவட்டதில் உள்ள தொண்டர் ஆசிரியர்களில் 179 பேரை உதவி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் முதற்கட்டமாக 79 சிங்கள தொண்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட போதிலும் சிறுபான்மையினத்தை சேர்ந்த ஒருவரேனும் நியமிக்கப்படவில்லை என அம்பாறை மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம். சப்றாஸ் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

அத்துடன் மிகுதியாக உள்ள 109 உதவி ஆசிரியர்கள் நியனங்கள் இது வரை வழங்கப்படவில்லை எனவும் சப்றாஸ் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "உதவி ஆசிரியர் நியமனத்திற்காக, கடந்த 2009 பெப்ரவரி மாதம் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பல தமிழர், முஸ்லிம்கள் நேர்முக பரீட்சையில் கலந்து கொண்டனர். எனினும் கடந்த ஒன்றறை வருடங்களாகியும் இவர்களுக்கான நியமனம் வழங்கப்படவில்லை.

இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இரண்டு தடவைகள் சந்தித்து இதனை தெரிவித்தேம். அதற்கு ஜனாதிபதி இந்நியமனம் தொடர்பில் அனைத்து அதிகாரங்களையும் மாகாண ஆளுநர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அதனால் ஆளுநருடன் தொடர்பு கொள்ளும் படியும் கூறினார். பலமுறை கிழக்கு மாகாண ஆளுநரை சந்திக்க முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை" என  தெரிவித்தார். 

தொண்டர் ஆசிரியர்களில் 4700 பேர் உதவி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் என மஹிந்த சிந்தனையில் குறிப்பிட்டமைக்கிணங்க நாடளாவிய ரீதியில் பல நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--