2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

"உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் பேசும் வாக்காளர் சிந்தித்து காய் நகர்த்த வேண்டும்"

Menaka Mookandi   / 2010 ஜூலை 19 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் காலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வெகுவாய் பாதிக்கப் போவது தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களே.

எனவே, இதன்போது தமிழ் பேசும் வேட்பாளர்கள் தங்களது காய் நகர்த்தல் குறித்து வெகு சாதுரியமாக இப்பொழுதிலிருந்தே சிந்திக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவர் வேலணை வேணியன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் தங்களை தமது கிராம சேவகர்களூடாக வாக்காளர் இடாப்பில் பதிந்து கொள்வது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு கிழக்குப் பகுதிகளில் புதிய குடியேற்றங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டால் தமிழ் மக்களின் வாக்குகள் குறைவடைய வாய்ப்புக்கள் ஏற்படலாம்.

இனிவரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வேட்பாளர்களாகப் போட்டியிடவுள்ளோர், தமது மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அவர்களது வாக்குகளை முறையாக பாவிக்க வேண்டும் என்பதனை மக்களுக்குத் தெளிவுபடுத்த தவரக்கூடாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--