2025 ஜூலை 05, சனிக்கிழமை

கோத்தபாய ராஜபக்ஸ "சண்டே லீடர்" பத்திரிகையிடம் நஷ்டஈடு கோரி கடிதம்

Super User   / 2009 டிசெம்பர் 20 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ "சண்டே லீடர்" பத்திரிகை நிறுவனத்திடம்  ஒரு பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

ஓய்வு பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் தொடர்புபடுத்தி பாதுகாப்பு அமைச்சுக்கு அவதூறு   ஏற்படும் வகையில் கடந்த 6ஆம், 12ஆம் திகதிகளில் "சண்டே லீடர்" பத்திரிகையில் கட்டுரை வெளியானதாக கோத்தபாய ராஜபக்ஸ அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.

இதனாலேயே, "சண்டே லீடர்" பத்திரிகை நிறுவனத்திடம்  ஒரு பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி பாதுகாப்புச் செயலாளர் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இந்த நிலையில்,"சண்டே லீடர்" பத்திரிகை பாதுகாப்புச் செயலாளரிடம் மன்னிப்புக் கோர தவறும் பட்சத்தில் அந்த பத்திரிகைக்கு எதிராக ஒரு பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும்  அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

"சண்டே லீடர்" பத்திரிகையின் ஆசிரியர் பிரெட்ரிகா  ஜான்ஸ்  மற்றும் தலைவர் லால் விக்கிரமதுங்கவிடமே நஷ்டஈடு கோரி, சட்டத்தரணி சனத்  விஜயவர்த்தனவின் ஊடாக கோத்தபாய ராஜபக்ஸ கடிதம்  அனுப்பிவைத்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .