Menaka Mookandi / 2012 நவம்பர் 18 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினருக்கும் அரச படைகளுக்கும் இடையிலான போரின் இறுதிக் கட்டத்தின் போது இருதரப்பினரும் மேற்கொண்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விடயங்களை பலர் ஒருவாறு மறந்து வரும் நிலையில் அவற்றைப் பற்றிய நினைவுகளை தூண்டும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக பரிசீலனைக் குழுவொன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
'போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தருஸ்மனின் தலைமையிலான குழு செய்திருந்த பரிந்துரையை இந்த உள்ளக அறிக்கை மேலும் வலுப்பெறச்செய்துள்ளது' எனக் கூறும் மனித உரிமை கண்காணிப்பக நிறுவனம் 'அதனை செய்ய பான் கீ மூன் தவறும் பட்சத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை தமது 2013ஆம் ஆண்டு மார்ச் மாத அமர்வின் போது அவ்வாறானதோர் பொறிமுறையை உருவாக்க வேண்டும்' என்று கூறுகிறது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .