2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

சுற்றுலாத்தலமாக மாறும் கீரிமலை

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கு.சுரேன்)


யாழ்ப்பாணம், கீரிமலைப் பகுதி தற்போது அனைவரையும் கவரும் வகையில் சுற்றுலாத்தலமாக மாறிவருகின்றது.

கீரிமலை புனித தீர்த்தக் கேணி, கீரிமலைக் கடல், அங்குள்ள பண்டைய கட்டிடங்கள் மற்றும் சிற்பங்கள், மாருதப்பூரவல்லியின் குதிரை முகம் நீங்கிய கீரிமலை நகுலேஸ்வரக் கோவில், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திலுள்ள விலங்குகள் பராமரிப்புக்கூடங்கள்  உள்ளிட்டவைகளை கொண்டமைந்துள்ள கீரிமலைப் பகுதி சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

முன்னர் இறந்தவர்களுக்கான பிதிர்க்கடன்களை தீர்ப்பதற்காக கீரிமலைக் கடலும் கீரிமலை தீர்த்தக் கேணியும் பயன்படுத்தப்பட்டுவந்தது. தற்போது கீரிமலை தீர்த்தக் கேணியில் பிதிர்க்கடன்களை தீர்க்க வருபவர்கள் மாத்திரம் நீராடுவதற்கு என்றில்லாது,  அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் இத்தீர்த்தக் கேணியில் நீராடி விட்டுச் செல்கின்றனர்.

அத்துடன், இத்தீர்த்தக் கேணி ஒரு சிறிய நீச்சல் தடாகம் போன்று காட்சியளிப்பதுடன், இயற்கையான முறையில் நீர் மாற்றமும் செய்யப்பட்டுவருகின்றது.
  Comments - 0

 • kasthuri Wednesday, 09 January 2013 04:21 AM

  கீரிமலை புனித தீர்த்தக் கேணி, நல்லம். உண்மை

  Reply : 0       0

  tharsika Monday, 07 January 2013 09:38 AM

  நல்லா இருக்கு

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .