2025 நவம்பர் 05, புதன்கிழமை

வவுனியாவில் பெண் கொலை: கணவர் தலைமறைவு

Freelancer   / 2025 நவம்பர் 05 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலத்தை நேற்று பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பெண் அவரது கணவர் மற்றும் பெண் குழந்தையுடன்  வீட்டில் இருந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டுக்குச் சென்று பார்த்தபோது தனது மகள் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
 
அதே பகுதியைச் சேர்ந்த இ.சிந்துஜா (வயது 25)  என்ற ஒரு பிள்ளையின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தின் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டமையால் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, பெண்ணின் கணவர், அவரது இரண்டு வயது பெண் குழந்தையுடன் தலைமறைவாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X