Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா கிரான்ட் ஹோட்டலில் உள்ள விசேட சமையல் குழுவினரும் மற்றும் சேவையாளர்களும் இணைந்து உலகின் மிகப்பெரிய பிட்ஸா ஒன்றை தயாரித்துள்ளனர்.
இந்த பீட்ஸாவானது, 200 கிலோகிராம் ஸ்டோபரி பழங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மொத்த எடை 1400 கிலோகிராம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த ஹோட்டலின் விசேட சமையல் குழுவின் பிரதான சமையலாளர், பிரியந்த வீரசிங்க மற்றும் ஹோட்டல் சேவையாளர்கள் 100 பேரும் இணைந்து இம்மாபெரும் ஸ்டோபரி பிட்ஸாவை உருவாக்கியுள்ளனர்.
குறித்த விழாவுக்கு தலைமை தாங்கிய, நுவரெலியா மாவட்ட மாநகர சபையின் தலைவர், சந்தன லால் கருத்து தெரிவிக்கையில், “நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஸ்டோபரி தோட்ட தொழிலாளர்களை பயிர்ச் செய்கை தொடர்பில் மேலும் ஊக்குவிப்பதற்காகவும் அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்டோபரி பயிர்ச் செய்கையை பிரபல்யப்படுத்தும் நோக்கிலேயே இத்தயாரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டது” எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
26 Feb 2021
26 Feb 2021