2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

SUMO - மல்யுத்தப் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர்கள்

Editorial   / 2018 ஏப்ரல் 22 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

சர்வதேச SUMO (சுமோ) மல்யுத்த சம்மேளனத்தின் இணை அனுசரனையுடன், இலங்கை சுமோ மல்யுத்த சங்கத்தினால் நடத்தப்பட்ட, 2 ஆவது தேசிய வளர்ந்தோருக்கான சுமோ மல்யுத்த விளையாட்டுப் போட்டிகள், கொழும்பு வை.எம்.பி.ஏ. உள்ளக விளையாட்டு அரங்கில், சங்கத்தின் தலைவர் கீத்திசிறி டி சொய்ஸா தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி, சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக் கழக வீரர்கள் சுமோ மல்யுத்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சுப்பிரமணியம் திபாகரன் தலைமையில் பங்கு கொண்டதுடன், பதக்கங்களைப் பெற்றுகொண்டுள்ளனர்.

115 கிலோ பிரிவில் ம.வினோத் வெள்ளிப்பதக்கத்தினையும், திறந்த நிறை பிரிவில் வெண்கலப்பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டார். ரி.தக்சன், இ.பானுசன், எஸ்.நிதுர்சன் ஆகியோர் வெண்கலப்பதக்கத்தினையும், பெற்றுக்கொண்டனர். மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியரும் பயிற்றுவிப்பாளருமாகிய சு.திபாகரன், இப்போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டார்.   

சர்வதேச சுமோ மல்யுத்த சங்கத்தின் பிரதிநிதிகள் அதிதிகளாகவும் நடுவர்களாகவும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .