Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மே 01 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி கடற்கரையை அண்டி, ஒரு சிறிய தனிமைப்படுத்தப்பட்ட கடற்கரை தான் இந்த உனவட்டுன ஜங்கல் பீச் ஆகும். காடுகளடர்ந்த பகுதியில் இது அமையப்பெற்றுள்ளமையால் இதனை, ‘உனவட்டுன ஜங்கல் பீச்’ என்று அழைப்பர்.
சுற்றுலா பயணிகளை மிக எளிதில் கவரக்கூடிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். ஆகையால் தான் இங்கு ஏராளமான ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் இரவு நேர பொழுதுபோக்கு களியாட்ட நிலையங்கள் என பலவற்றை காணக்கூடியதாக இருக்கின்றது. அத்துடன் இங்கு இலங்கையில் பிரத்தியேக உணவு வகைகளும் ஏராளமாக கிடைக்கப்பெறுகின்றன. இவற்றில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டத்தை எந்நேரமும் காணலாம்.
கடற்கரை வழியே சற்று தொலைதூரம் நடந்து செல்கையில், ஒரு அழகிய அடர்ந்த காடொன்றை அடையலாம். இது இக்கடற்கரையின் இயற்கை அழகை மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறிய மற்றும் அமைதியான கடற்பரப்பு என்பதால் அதிகம் பேர் விரும்பி வருகை தருகின்றமையை தினசரி காணக்கூடியதாக உள்ளது. எது எவ்வாறெனினும் இலங்கையின் சுற்றலா தளங்களில் மனதை கவரும் ஒரு சுற்றுலா தளமாக உனவட்டுன ஜங்கல் பீச் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
06 Mar 2021
06 Mar 2021
06 Mar 2021