Editorial / 2018 மார்ச் 08 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்னேரியா தேசியப் பூங்காவானது, இலங்கையில் பொலன்னறுவை மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளது. இது காட்டு யானைகளின் கூட்டத்தினைப் பார்வையிடும், ஒரு சுற்றுலாத்துறைப் பகுதியாக பிரசித்திப் பெற்றுள்ளமையினால், இங்கு வருடந்தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பெருமளவாக, மே மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை இப்பூங்காவை சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிடுகின்றனர்.

உலகிலேயே ஆசிய யானைகள் கூடும் பெரியளவிலான இடம் மின்னேரியாப் பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. கோடை காலங்களில் வெளியிடங்களில் இருந்தும் சில யானைக்கூட்டங்கள் உணவு தேடி வந்து போகும் இடமாகவும் மின்னேரியாப் பூங்கா விளங்குகின்றது. இங்கு 300 க்கும் அதிகமான யானைகளை, ஒரே தடவையில் பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கின்றமையினாலேயே, சுற்றுலாப் பயணிகளை இப்பூங்கா அதிகமாகக் கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இங்கு 170 வகையான பறவையினங்களையும், 24 வகையானப் பாலூட்டிகளையும், மற்றும் 25 வகையான ஊர்வன ஜீவராசிகளையும் கண்டுகளிக்க முடியும். இத்தகைய சிறப்பினைக் கொண்டிருப்பதினாலேயே, சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆண்டுதோறும் இங்கு அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

22 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago