2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

யாழில் தரமான Lux Etoiles ஹோட்டல்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(Shan Bandu)

 

மூன்று தசாப்தகால யுத்தம் முடிவடைந்த நிலையில் யாழ்ப்பாணம் இன்று எல்லோரும் சென்று பார்த்து வருகின்ற சுற்றுலா தலமாக மாறியிருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான தென்னிலங்கை மக்களும் வெளிநாட்டு பயணிகளும் யாழ்ப்பாணத்துக்கு செல்கிறார்கள்.

யாழ்ப்பாணம் செல்கின்ற வழிகளில் யுத்தத்தின் வடுக்களையும் காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக கிளிநொச்சி, ஆனையிறவு, முகமாலை பிரதேசங்களில் யுத்தத்தின் தலைவிரி கோலம் இப்பொழுதும் கண்முன் நிழலாட செய்கின்றன சிதைவுகள்.

யாழ். மண்ணின் சிதைவுகளும் தென்னிலங்கை மக்களுக்கு விசித்திரமாகத்தான் தென்படுகின்றன. சிதைவுகள் அனைத்தும் அவர்களை சிந்திக்க வைப்பதென்னமோ உண்மைதான்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்திற்கு செல்கின்ற சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு போதிய இடவசதிகள் இல்லாதிருப்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் செல்கின்ற சுற்றுலா பயணிகள் மரங்களின் கீழும் வழிபாட்டு தலங்களிலும் இரவினில் தங்கவேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

யாழ். வருகின்ற சுற்றுலா பயணிகள் நிம்மதியாக தங்குவதற்கு ஏற்ற இடமொன்றை தேடுவதில் பெரும் சிரமத்தினை எதிர்நோக்குகிறார்கள். இவர்களின் இப்பிரச்சினைகளை தீர்க்குமுகமாக நல்லூர் செட்டி வீதியில் உருவாகியிருக்கிறது Lux Etoiles என்னும் புதிய ஹோட்டல்.

இந்த ஹோட்டல் யாழ்ப்பாணத்தின் மத்தியில் அமைந்திருப்பதால் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்ப்பதற்கு இலகுவானதாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த ஹோட்டலின் உரிமையாளர்கள் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்கவேண்டிய முக்கிய இடங்கள் பற்றிய வழிகாட்டுதலையும் வழங்குகின்றனர்.

8 அறைகளைக் கொண்ட Lux Etoiles ஹோட்டலில் பாரம்பரிய உணவு வகைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளும் இருக்கின்றன. அத்தோடு சுமார் 100 பேர் ஒன்றாக இருந்து உணவு எடுக்கக்கூடிய ரெஸ்டோரன்ட், டென்னிஸ் விளையாடும் இடம் போன்றனவும் உருவாக இருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் சாதாரணமான பெறுமதியில் தரமான தங்குமிடமாக Lux Etoiles உருவாகியிருப்பது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்வான செய்தியாக இருக்கின்றமை சிறப்பானதாகும். நல்லூர் செட்டி வீதியில் அமைந்திருக்கும் இந்த ஹோட்டலில் நீங்களும் தங்க விரும்பினார் 021-2223966 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--