2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

அக்குறனையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Menaka Mookandi   / 2010 ஜூலை 07 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குறனை பிரதேசத்தில் வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

2010ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு அக்குறனை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளின் பிரதான அம்சமாக இந்த  வெலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து மிகக் கூடுதலான டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் அக்குறனைப் பிரதேசத்திலிருந்தே இனங்காணப்பட்டனர். அந்தவகையில், 2009ஆம் ஆண்டில் 966 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டதுடன் பெண்கள், சிறு பிள்ளைகள் உட்பட எட்டு பேர் இதன் பாதிப்பினால் உயிரிழந்தனர்.

இதேவேளை, இவ்வாண்டுக்கான உள்ளூராட்சி வாரம் இம்மாதம் 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--