Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S. Shivany / 2021 மார்ச் 03 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 தொற்று காரணமாக உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி-இரணைத்தீவு பகுதியில் அடக்கம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமைக்கு, பிரதேச மக்கள் இன்று(03) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கொவிட் தொற்றாளர்கள் எவரும் இரணைத்தீவு பகுதியில் இதுவரை பதிவாகவில்லை எனவும் இவ்வாறு இருக்கையில், கொவிட் தொற்றால் உயிரிழப்போரை இப்பகுதியில் அடக்கம் செய்ய எடுத்த தீர்மானத்துக்கு தாம் கடும் எதிர்ப்பை வெளியிடுவதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இரணைத்தீவில் 165 குடும்பங்கள் மீள்குறியேறி வாழ்ந்துவருகின்ற நிலையில், கொவிட் சடலங்களை அடக்கம் செய்வதால் இப்பகுதியில் அச்சுறுத்தல் ஏற்படலாம் என அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்கள் பல நாட்டில் உள்ள போதிலும், கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய இரணைத்தீவை தேர்ந்தெடுத்தமைக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யவும் பிரதேச மக்கள் எண்ணியுள்ளனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago