Editorial / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம்- அசோகபுரம் வனப்பகுதியிலிருந்து, மனித எச்சங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவை சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன நபரின் மனித எச்சங்களான இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.
மனித எச்சங்கள் காணப்பட்ட இடத்தில் பாதணி, ஆடை என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, காணாமல் போன நபரின் மகள் இவை தன்னுடைய தந்தையின் பொருட்கள் என, அடையாளம் காட்டியுள்ளார்.
மீட்கப்பட்ட எச்சங்கள், பரிசோதனை மேற்கொள்வதற்காக, அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago