Super User / 2010 மார்ச் 25 , மு.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை,வீரக்கொட சோதனைச்சாவடியில் இடம்பெற்ற துப்பாகிச்சூட்டுபிரயோகத்தில் கொல்லப்பட்டவர் இராணுவத்தை விட்டும் தப்பிச்சென்றவராவார்.இவ்வாறு பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் ஒருவரும் இராணுவத்தை விட்டும் தப்பியோடியவர் என்று அவர் கூறினார்.
இவர்கள் அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களா என்று தமிழ்மிரர் கேள்வி எழுப்பியது.
இதற்கு இல்லையெனப்பதிலளித்த பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி இவர்கள் தனிப்பட்ட குழுவொன்றைச்சேர்ந்தவர்கள் என்றும் கூறினார்.
இதேவேளை,இத்துப்பாக்கிச்சூட்டுப்பிரயோகம் காரணமாக பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரும்,இரண்டு சிவில் பாதுகாப்புப்படை வீரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
6 hours ago
9 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
06 Nov 2025