2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

அரசியலமைப்பு சபையிலிருந்து விலகினார் விஜயதாச

ஆர்.மகேஸ்வரி   / 2017 டிசெம்பர் 28 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ அரசியலமைப்பு சபையிலிருந்து விலகியுள்ளார்.

விஜயதாச ராஜபக்‌ஷ தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார். 

19வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது.இதில் 10 உறுபபினர்கள் அங்கம் வகிப்பதுடன், சபாநாயகர், பிரதமர், எதிர்கட்சித் தலைவருக்கே இந்த சபையின் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சபையின் உறுப்பினர்களாக அரசாங்கத் தரப்பில் இருவர், எதிர்கட்சியில் இருவர், ஜனாதிபதியின் பரிந்துரைக்கமையவும், பிரதமரின் பரிந்துரைக்கமைய ஒருவரும்,  சிறு கட்சிகளின் சார்பாக ஒருவரும் தெரிவு செய்யப்படுவர்.

10 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் ​ ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைய அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும், பிரதமரின் பரிந்துரைக்கு அமைய விஜேதாச ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த சபையின் முதலாவது கூட்டம் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில், நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X