2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘அரசியல்வாதிகளால் கிரிக்கெட் துறைக்கு அழிவு’

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 18 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல்வாதிகள் இலங்கை கிரிக்கெட் துறை அழிக்கப்படுவதாக, இலங்கை அணியின்  முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஒருவருடத்திற்குள் மாத்திரம்  இலங்கை அணியில் 60 புதிய வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முரளி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து வெளிவரும் “ த எக்கொனமிக்ஸ் டைம்ஸ்” பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 இலங்கை கிரிக்கெட் அணியில் தற்போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் அரசியல்வாதிகளின் கட்டுபாட்டின் கீழ் உள்ளது. கிரிக்கெட் தொடர்பில் குறைந்த அறிவு அல்லது அறிவில்லாதவர்களால் கிரிக்கெட் அழிவடைந்து செல்கின்றது. கிரிக்கெட் என்பது நம்பிக்கை. வீரர்கள் திறமையை வெளிப்படுத்தும் நம்பிக்கையை கட்டியெழுப்புவது அவசியம் என்று முரளி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .