2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடுகள்

J.A. George   / 2021 மார்ச் 05 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கண்டறிவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை ஆராய்ந்த அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அறிக்கையை கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் சட்டத்தரணி ஹருகுப்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல், இது தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X