2026 ஜனவரி 21, புதன்கிழமை

அலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள்

Editorial   / 2018 ஜூலை 19 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெற்றிடம் காணப்படும் அலுகோசு பதவிக்கு தம்மை இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, 8 பேர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என, சிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலுகோசு பதவி வெற்றிடத்துக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ள நிலையிலேயே, இவர்கள் அதற்கு முன்னதாக தங்களது விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பித்துள்ள 8  பேரும் ஆண்கள் எனவும், இவர்களில் மூவர் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி கற்காதவர்கள எனவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X