2020 பெப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை

அவசரகால சட்டத்துக்கு எதிரான மனு வாபஸ்

Editorial   / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் ஊடாக அரசியலமைப்பினை மீறியுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை வாபஸ் பெறுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

புவனேஹ அலுவிஹார, எல்.டி.பி.தெஹிதெனிய மற்றும் பத்மன் சூரசேன ஆகிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் இந்த மனு இன்று (07) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தற்போது, அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த மனுவுக்கான தேவை இல்லாதமையால் அதனை வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, மனுவினை வாபஸ் பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .