Editorial / 2017 டிசெம்பர் 04 , மு.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொது அமைப்புகளுடன் இணைந்து வடக்கு, கிழக்கு முழுவதும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னத்திலேயே போட்டியிடப்போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
அத்துடன் தம்மோடு இணைந்துசெயற்படுவர்களையும் இணைத்துக்கொண்டுசெயற்படவுள்ளதாகவும் அக் கட்சியானது அறிவித்துள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பொது எதிரணியொன்றுகளமிறங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியினரும் தமிழ் தேசிய மக்கள்முன்னனியினரும் தமிழ் மக்கள் பேரவையுடைய ஆதரவுடன்இணைந்து செயற்பட போவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது இப் பொது எதிரினயின் சின்னமாக தமிழர்விடுதலை கூட்டனியின் உதயசூரியன் சின்னம்பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில் அச் சின்னத்தில் இணைந்துபோட்டியிடுவது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னனிஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அதனால் ஈ.பி.ஆர்.எல்.எவ்கட்சிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியிருக்கும் இடையில்பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இது விடயம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின்தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவண்ணனை தொடர்புகொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்ட விடயத்தைதெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும்தெரிவித்திருப்பதாவது,
”இந்த உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியானதுஅகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சின்னமான சைக்கிள்சின்னத்திலேயே போட்டியிடவுள்ளது. இதில் வடக்கு கிழக்கைசேர்ந்த பொது அமைப்புக்களுடன் இணைந்தே போட்டியிடவுள்ளோம்.
எமது கொளைகையில் இருந்து நாம்விடுபட போவதில்லை. எனவே தான் சைக்கிள் சின்னத்திலேயேபோட்டியிடப்போகின்றோம்.
மேலும் எமது கொள்ளைகையை ஏற்று எமது கட்சியின்சின்னத்தில் போட்டியிடுவதற்கு எவர் தயாராக இருந்தாலும்அவர்களையும் இணைத்துக்கொண்டு நாம் செயற்படதயாராகவுள்ளோம் என்றும் மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார். (பிந்தியச் செய்தி நான்காம் பக்கத்தில்)
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago